சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டி : 37 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி

Oct 11 2020 6:33AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், 37 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியில், நேற்று நடைபெற்ற 25-வது ஆட்டத்தில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. பெங்களுரு அணியின் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 90 ரன்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்‍குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்‍க வீரர்களான ஷேன் வாட்சன், டூ பிளஸ்சிஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களும் நிலைத்து நின்று விளையாடாததால், சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 37 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முன்னணி அணியாக திகழ்ந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஐ.பி.எல். தொடரில் இதுவரை 7 போட்டிகளில் பங்கேற்று, 5 தோல்விகளுடன், புள்ளி பட்டியலில் 6 இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00