டிவில்லியர்சின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி அபார வெற்றி - 82 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது

Oct 13 2020 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் ஆட்டத்தில், 82 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்திய பெங்களூரு அணி, புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் த‌லைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச், தேவ்தத் படிக்கல் சிறப்பான தொடக்கம் தந்தனர். பின்ச் 47 ரன்களிலும், படிக்கல் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி, டிவில்லியர்ஸ் ஜோடி கொல்கத்தா பந்துவீச்சை சிதறடித்தது. அதிரடியாக விளையாடிய டிவில்லியர்ஸ், 33 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில், 6 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு பெங்களூரு அணி 194 ரன்கள் எடுத்தது.

195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்திய கொல்கத்தா அணியில், தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 112 ரன்கள் மட்டுமே எடுத்து 82 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியைத் தழுவியது. பெங்களூரு அணி தரப்பில், வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரில் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஆட்ட நாயகனாக A.B. டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு பெங்களூரு அணி முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00