ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 30வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி: 13 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது

Oct 15 2020 10:20AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 30வது லீக் ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை டெல்லி அணி வெற்றிக் கொண்டது.

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை அந்த அணி எடுத்தது. அதிகப்பட்சமாக ஷிகர் தவான் 57 ரன்களை எடுத்தார். ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், உனத்கட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் பென் ஸ்டோக் 41 ரன்கள் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்தபோதிலும் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அந்த அணி 20 ஓவர் முடிவில் ல் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00