சார்ஜாவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டி : 5 விக்‍கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது டெல்லி அணி

Oct 18 2020 10:03AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அணிக்‍கு எதிரான ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டியில், ஷிகர் தவானின் அதிரடி சதத்தால், 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் கிரிக்‍கெட் போட்டித் தொடரின் 34-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணியின் டு பிளசிஸ் 58 ரன்கள் எடுத்தார்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில், தொடக்க ஆட்டக்காரரான தவான் அதிரடியாக ஆடி சதமடித்தார். இறுதியில் டெல்லி அணி 19-வது ஓவரில் 5 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் 101 ரன்னும், அக்சர் படேல் 21 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்‍க வைத்துள்ளது. 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள சென்னை அணி, 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00