ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி - பிளே ஆப் வாய்ப்பை இழந்தது பஞ்சாப்

Nov 2 2020 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் பிளே ஆப் வாய்ப்பை பஞ்சாப் அணி இழந்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 55வது லீக் ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதின. அபுதாபில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பேட் செய்த பஞ்சாப் அணி, 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். இதையடுத்து, கே.எல்.ராகுல், நிகோலஸ் பூரன், கிறிஸ் கெயில் ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 153 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக தீபக் ஹோடா 62 ரன்கள் சேர்த்தார். சென்னை அணியின் பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. ருதுராஜ் கேய்க்வார், டூ ப்ளசிஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி வேகமாக முன்னேறியது. டூ ப்ளசிஸ் 48 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். இதையடுத்து ருதுராஜுடன் அம்பத்தி ராயுடு ஜோடி சேர்ந்தார். இறுதியில் 18 புள்ளி 5 ஓவரில் 154 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பஞ்சாப் அணி இழந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00