தவான், ரகானேவின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி அபார வெற்றி - பெங்களூரை வென்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி

Nov 3 2020 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

13-வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுத‌ாபியில் நடைபெற்ற 55வது லீக் ஆட்டத்தில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், பெங்களூரு அணியை பேட்டிங் செய்யும்படி அழைத்தார். முதலில் விளையாடிய பெங்களூரு அணியில், தொடக்க ஆட்டக்காரர் படிக்கல் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி 29 ரன்களிலும், டிவில்லியர்ஸ் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு பெங்களூரு அணி 152 ரன்கள் எடுத்தது.

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய டெல்லி அணியில், பிரித்வி ஷா 9 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிகர் தவான், அஜின்கியா ரகானே ஆகி​​யோர் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர். 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற டெல்லி அணி, புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பெங்களூரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆட்ட நாயகனாக, டெல்லி அணியின் Anrich Nortje தேர்வு செய்யப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00