உச்சக்கட்டத்தை எட்டிய ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் - ஷார்ஜாவில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதல்

Nov 3 2020 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில், பலம் வாய்ந்த மும்பை அணியை ஐதராபாத் அணி எதிர்கொள்கிறது. இதில், ஐதராபாத் அணி வெற்றி ​பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், கடைசி ‍லீக் ஆட்டமான 55-வது போட்டி, ஷார்ஜாவில் இன்றிரவு 7 முப்பது மணிக்கு தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில், மும்பை - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு மும்பை, டெல்லி, பெங்களூரு அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் ஐதராபாத் அணி உள்ளது. நான்காவது இடத்தில் 14 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி உள்ளபோதும், அதன் நிகர ரன்ரேட் எதிர்மறையாக இருப்பதால், மும்பை அணிக்கு எதிரான போட்டியில், ஐதராபாத் அணி ‍வெற்றிப் பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு எளிதாகத் தகுதி பெற்று விடும். பலம் வாய்ந்த மும்பை அணியை எதிர்கொள்ளும் ஐதராபாத் அணி, கட்டாயமாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இருப்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00