ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் - டேவிட் வார்னர், விருத்திமான் சகாவின் அதிரடி ஆட்டத்தால் மும்பையை வென்று பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்

Nov 4 2020 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -
டேவிட் வார்னர், விருத்திமான் சகா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் மும்பையை வீழ்த்திய ஐதராபாத் அணி, பிளே ஆஃப் சுற்று தகுதி பெற்றது.

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடைசி லீக் ஆட‌்டம், ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணியும் மோதின. காயத்தில் இருந்து மீண்ட மும்பை கேப்டன் ரோகித் சர்மா, நேற்று களமிறங்கினார். டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் வார்னர், மும்பை அணியை முதலில் பேட்டிங் செய்யும்படி அழை‌த்தார்.

மும்பை அணிக்கு ரோகித் சர்மா, குயின்டன் டி காக் ஜோடி சுமாரான தொடக்கம் கொடுத்தது. குயின்டன் டி காக் 25 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் 36 ரன்களிலும், இஷான் கிஷான் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நடராஜன் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்த போலார்டு 41 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

எளிய இலக்கைத் துரத்திய ஐதராபாத் அணிக்கு கேப்டன் வார்னர், சகா ஆகியோர் ஜோடி சூப்பர் தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்து க‌டைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தனர். இதன் மூலம், புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு சென்ற ஐதராபாத் அணி, பிளே ஆப் சுற்று வாய்ப்பையும் உறுதி செய்தது. ஐதராபாத் வெற்றி பெற்றதால், கொல்கத்தா அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்து போனது. துபாயில் நாளை இரவு ஏழு முப்பது மணிக்கு நடை‍பெறும் முதல் தகுதிச்சுற்றில் மும்பை - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இ‌தில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும். தோல்வியடையும் அணிக்கு, இரண்டாவது தகுதிச்சுற்றில் பங்கேற்க மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00