6வது முறையாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்‍கு முன்னேறியது மும்பை - பிளே ஆப் சுற்றில் டெல்லியை 57 ரன்கள் வென்றது

Nov 6 2020 10:39AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றில், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்‍கு முன்னேறியது.

துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்‍கான போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதுமின்றி வெளியேறினார். குவிண்டன் டி காக் 40 ரன்களில் வெளியேற, சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி, அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாசி 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இஷான் கிஷன் 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். களத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு 14 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். இறுதியில், மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது.

பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. முதல் 2 ஓவர்களிலேயே அந்த அணியின் பிரித்வி ஷா, ரகேனா, ஷிகார் தவான் ஆகியோர் ரன் ஏதும் எடுக்‍காமல், அடுத்தடுத்து விக்‍கெட்டுகளை பறிகொடுத்தனர். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 12 ரன்னிலும், ரிஷப் பண்ட் 3 ரன்னிலும் வெளியேறினர். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 46 பந்தில் 65 ரன்கள் எடுத்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அக்சார் பட்டேல் கடைசி வரை போராடி 42 ரன்கள் அடிக்‍க, 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்துவீச்சில் அதிரடி காட்டிய பும்ரா, 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்‍கொடுத்து, 4 விக்‍கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதனிடையே, இன்று அபுதாபியில் இரவு 7.30 மணிக்‍கு நடைபெறும் வெளியேற்றும் சுற்று போட்டியில், பெங்களூரு அணியை ஹைதராபாத் எதிர்கொள்கிறது. இன்றைய போட்டியில் ​ஹைதராபாத் அணி வலுவான நிலையில் இருப்பதால், அந்த அணி வெற்றி பெறுவதற்கான சாத்தியக்‍ கூறுகள் இருப்பதாக கிரிக்‍கெட் விமர்சகர் திரு. ராமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00