ஐபிஎல் கிரிக்‍கெட் எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரை 6 விக்‍கெட் வித்தியாசத்தில் வென்றது ஹைதரபாத் - இறுதிச் சுற்று தகுதிக்‍கான போட்டியில் நாளை டெல்லியிடம் பலப்பரீட்சை

Nov 7 2020 10:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐபிஎல் கிரிக்‍கெட் எலிமினேட்டர் சுற்றில், பெங்களூரை 6 விக்‍கெட் வித்தியாசத்தில் ஹைதரபாத் அணி வென்றது.

அபுதாபியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு தரப்பில் களமிறங்கிய கேப்டன் விராட்கோலி, படிக்‍கல் இணை, தொடக்‍கத்திலேயே ஆட்டமிழந்ததால், அந்த அணிக்‍கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு வந்த Aaron Finch மற்றும் AB De Villiers ஜோடி, நிதானமாக விளையாடி, அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 43 பந்துகளை சந்தித்த AB de Villiers 5 பவுண்டரிகளுடன் அரை சதத்தைக்‍ கடந்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 7 விக்‍கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய Jason Holder 3 விக்‍கெட்டுகளும், நடராஜன் 2 விக்‍கெட்டுகளையும் எடுத்தனர்.

132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்‍குடன் களமிறங்கிய ஹைதரபாத் அணியில், தொடக்‍க ஆட்டக்‍காரர் Goswami ரன் ஏதும் எடுக்‍காமலும், கேப்டன் வார்னர் 17 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய மணீஸ் பாண்டே 24 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர், களமிறங்கிய Kane Williamson, Jason Holder ஜோடி, பொறுப்புடன் விளையாடி, கடைசி வரை ஆட்டமிழக்‍காமல் அணியை வெற்றிப் பாதைக்‍கு அழைத்துச் சென்றனர். Kane Williamson 44 பந்துகளில் 2 சிக்‍சர், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்களும், Jason Holder 24 ரன்களும் எடுத்தனர். இறுதியில், ஹைதரபாத் அணி 19 புள்ளி 2 ஓவர்களின் முடிவில் 4 விக்‍கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் சிறப்பாக பந்து வீசிய முகம்மது சிராஜ் 2 விக்‍கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்‍கான வாய்ப்பை ஹைதரபாத் அணி தக்‍க​ வைத்துக்‍ கொண்டது. இதனிடையே, நாளை அபுதாபியில் நடைபெறும் இறுதிச் சுற்றுக்‍கான தகுதி போட்டியில், ஹைதரபாத் அணி டெல்லியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி வரும் 10ம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மும்பை அணியுடன் மோத உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00