ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டியின் குவாலிபையர் 2-வது ஆட்டம் : டெல்லி - ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை

Nov 8 2020 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டியின் இறுதியாட்டத்திற்கு தகுதி பெற, குவாலிபையர் 2-வது ஆட்டத்தில், டெல்லி - ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தத் தொடர், விறுவிறுப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நடப்புச் சாம்பியான மும்பை அணி, குவாலிபையர் முதல் ஆட்டத்தில், டெல்லி அணியை தோற்கடித்து ஏற்கெனவே இறுதிப்போட்டிக்‍கு முன்னேறியுள்ளது. எலிமினேட்டர் ஆட்டத்தில், பெங்களூர் அணியை 6 விக்‍கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, குவாலிபையர் 2-வது ஆட்டத்திற்கு ஹைதராபாத் அணி முன்னேறியது.

இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்‍கு அபுதாபியில் நடைபெறவுள்ள குவாலிபையர் 2-வது ஆட்டத்தில், டெல்லி அணியை, ஹைதராபாத் எதிர்கொள்கிறது. டெல்லி அணி முதல் முறையாகவும், ஹைதராபாத் அணி 2-வது முறையாக இறுதியாட்டத்திற்கு முன்னேறும் முனைப்புடன் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவதால், போட்டி விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்‍கும் என எதிர்பார்க்‍கப்படுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ள இறுதியாட்டத்தில், மும்பை அணியை எதிர்கொள்ளும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00