ஆஸ்திரேலியாவுக்‍கு எதிரான கிரிக்‍கெட் தொடர் - சிட்னியில் வரும் 13ம் தேதிமுதல் இந்திய அணி வீரர்கள் பயிற்சி

Nov 8 2020 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய கிரிக்கெட் அணி வரும் 13ம் தேதி சிட்னி மைதானத்தில் பயிற்சியை தொடங்கவுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலிய நாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி, மூன்று ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளது. நவம்பர் 27ம் தேதி தொடங்கி ஜனவரி 19ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்று விளையாடவுள்ளது. இதற்காக, வரும் 12ம் தேதி ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு, அன்றைய தினமே கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. இதில், தொற்று இல்லை என உறுதி செய்யப்படும் பட்சத்தில் அடுத்த நாளே இந்திய வீரர்கள் சிட்னியில் பயிற்சியை தொடங்கவுள்ளனர். மேலும், இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ளதால் ஜனவரி மாதத்தில் நடைபெறும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ரஹானே, அணியை வழி நடத்துவார் என்றும் கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00