ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டியின் 2-வது தகுதி ஆட்டம் : ஹைதரபாத் அணியை தோற்கடித்து, முதல்முறையாக இறுதியாட்டத்திற்கு முன்னேறியது டெல்லி அணி

Nov 9 2020 9:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டியின் 2-வது தகுதிச்சுற்றில், ஐதராபாத் அணியை தோற்கடித்து, டெல்லி அணி முதல் முறையாக இறுதியாட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டிக்‍கு நடப்புச் சாம்பியனான மும்பை அணி ஏற்கெனவே முன்னேறிய நிலையில், 2-வது தகுதிச் சுற்று ஆட்டம் அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில், டெல்லி - ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி 78 ரன்களை குவித்தார்.

இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணிக்‍கு, தொடக்‍கமே அதிர்ச்சி காத்திருந்தது. பெரிதும் எதிர்பார்க்‍கப்பட்ட வார்னர் 2 ரன்னிலும், பிரியம் கார்க் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த மணீஷ் பாண்டே 21 ரன்னிலும், ஹோல்டர் 11 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். ஒருபுறம் விக்கெட்டுக்கள் மளமளவென வீழ்ந்தாலும், மறுமுனையில் கேன் வில்லியம்சன் பொறுப்புடன் விளையாடி 67 ரன்கள் எடுத்தார். எனினும், பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், ஐதராபாத் அணி 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்று, முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. டெல்லி அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

வரும் 10-ம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில், மும்பை - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00