ஆஸ்திரேலியாவுக்‍கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறார் ரோஹித் சர்மா - ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகள் முடிந்த பிறகு அணியில் இணைந்து கொள்ள திட்டம்

Nov 9 2020 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவுக்‍கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வகையில், இந்திய வீரர் ரோஹித் சர்மா, பின்னர் பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கொரோனா​ தொற்று பரவல் காரணமாக கடந்த 7 மாதத்திற்கும் மேலாக இந்திய அணி எந்தவொரு சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்த இடைவெளிக்‍குப் பிறகு முதல்முறையாக ஆஸ்திரேலியா சென்று விளையாட உள்ளது. வரும் 27 தேதி முதல் இந்தத் தொடர் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து டி-20 மற்றும் டெஸ்ட் போட்டித் தொடர்கள் நடைபெற உள்ளன. இந்த 3 தொடருக்‍குமான இந்திய அணியில் ஆச்சரியமளிக்‍கும் வகையில் முன்னணி வீரர் ரோஹித் சர்மா சேர்க்‍கப்படவில்லை. காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை எனக்‍ கூறப்பட்டது. தற்போது திடீர் திருப்பமாக கடைசியாக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வகையில் அவர் பின்னர் ஆஸ்திரேலியா சென்று இந்திய அணியுடன் இணைந்து கொள்வார் என செய்திகள் தெரிவிக்‍கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00