ஆஸ்திரேலிய அணியுடனான டி20 போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் - காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக மற்றொரு தமிழக வீரரான நடராஜன் அணியில் சேர்ப்பு

Nov 10 2020 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில், காயம் காரணமாக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி விலகியதை அடுத்து, மற்றொரு தமிழக வீரரான நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்​கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று விதமான தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வீரர்கள் உடற்தகுதி குறித்து, பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் அண்மையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில், பி.சி.சி.ஐ.,யின் மருத்துவ குழு அளித்த பரிந்துரைப்படி, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு நாள் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில், நட்சத்திர வீரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக தமிழகத்தைச் ‍சேர்ந்த‌ சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி விலகிய‌தை அடுத்து, அவருக்கு பதிலாக, மற்றொரு தமிழகத்‌தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிக்கான தொடரில், விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் உடன், மற்றொரு வீரராக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டு உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00