ஐ.பி.எல். தொடரில் கோப்பையை வெல்லப்போவது யார் - இறுதிப் போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் இன்று பலப்பரிட்சை

Nov 10 2020 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
இன்று நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிபோட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

13வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்களில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் மும்பை, டெல்லி, பெங்களூர், ஐதராபாத் ஆகிய அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. டெல்லி அணியை வீழ்த்து மும்பை அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வெள்ளிக்கிழமை நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி வெளியேற்றியது. நேற்று முன்தினம் நடந்த 'குவாலிபையர் 2' ஆட்டத்தில் டெல்லி அணி 17 ரன்னில் ஐதராபாத்தை தோற்கடித்து இறுதி போட்டியில் நுழைந்தது. துபாயில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதவுள்ளன. 6வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள மும்பை அணி ஏற்கனவே 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று 5வது முறையாக மீண்டும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

இதற்கிடையே, இறுதிப் போட்டியில், அனுபவம் வாய்ந்த மும்பை அணியை சமாளிப்பது, டெல்லிக்கு கடினமானதாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர் ராமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00