ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் டெல்லியை வென்றது மும்பை - 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி மும்பை அணி அசத்தல்

Nov 11 2020 6:37AM
எழுத்தின் அளவு: அ + அ -
13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் , ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரஹானே 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷிகர் தவானும் 15 ரன்களில் வெளியேற, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தில் டெல்லி அணியின் ரன்ரேட் உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 65 ரன்களும் ரிஷாப் பண்ட் 56 ரன்களும் எடுத்தனர். மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதிலும், அணியின் கேப்டன் ரோகித் சர்மா பொறுப்பான ஆடி அரைசதம் அடித்தார். இறுதியாக மும்பை அணி 18 புள்ளி 4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00