இந்தியாவில் மீண்டும் வருகிறது 'பப்ஜி' விளையாட்டு : இந்தியாவுக்கென பிரத்யேகமாக தயாராகிறது

Nov 12 2020 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய வாடிக்கையாளர்களுக்கு என, தனித்துவமான PUBG Mobile India என்ற விளையாட்டை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக, தென் கொரியாவின் PUBG கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

அண்டை நாடான சீனாவுடன், லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்ட பிறகு, அந்நாட்டின் ஷேர் இட், டிக் டாக், பப்ஜி உள்ளிட்ட பல்வேறு மொபைல் செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இது ஒருபுறமிருக்க, PUBG விளையாட்டுக்கு இளைஞர்கள் அடிமையாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்தது.

இந்நிலையில், இந்திய கலாச்சாரத்திற்கு பொருத்தமான பாத்திரங்களுடன், நாகரீகமாகவும், பாதுகாப்பானதாகவும் PUBG விளையாட்டை, இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தென் கொரியாவின் PUBG கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இந்தியாவில் PUBG விளையாட்டை நிர்வகிக்க 740 கோடி ரூபாய் முதலீட்டில் தனியாக துணை நிறுவனம் ​தொடங்கப்படும் என்றும், நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00