உலக ஆடவர் சாம்பியன்ஷிப் டென்னிஸ் : அரையிறுதிக்கு முன்னேறினார் ரஃபேல் நடால்
Nov 20 2020 10:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
உலகின் முன்னிலை வீரர்கள் 8 பேர் பங்கேற்கும் ATP Finals டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெறுகிறது. வீரர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கபட்டு விளையாடி வரும் நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில், உலக தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள ஸ்பெயின் ரஃபேல் நடால், கிரேக்க வீரர் Stefanos Tsitsipas-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-4, 4-6, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நாளை நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில், ரஷ்ய வீரர் Daniil Medvedev-வை, ரஃபேல் நடால் எதிர்கொள்கிறார்.