ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் இன்று தொடக்கம் : சென்னை, பெங்களூரு, ஒடிசா உள்ளிட்ட 11 அணிகள் பங்கேற்பு

Nov 20 2020 11:08AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில், கொல்கத்தாவை சேர்ந்த ஏ.டி.கே.மோகன் பகான்- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்திய வீரர்களுடன் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் இணைந்து பங்கேற்கும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவில், கடந்த சீசனில் கொல்கத்தா அணி, சென்னை அணியை தோற்கடித்து, 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்நிலையில், 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர், கோவா மாநிலத்தில் இன்று தொடங்கி, மார்ச் மாதம் வரை நடைபெறவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் கோவாவில் ரசிகர்கள் இன்றி நடைபெறவுள்ளது. 11 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித் தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதன் முதல் ஆட்டத்தில், கொல்கத்தாவை சேர்ந்த ஏ.டி.கே.மோகன் பகான்- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00