இந்தியா - ஆஸி. இடையேயான கிரிக்கெட் தொடர் : முதல் ஆட்டத்தில் நாளை இரு அணிகளும் மோதல்
Nov 26 2020 5:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை சிட்னியில் நடைபெறுகிறது.
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அங்கு 3 ஒருநாள் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. பயணத்தின் முதல் கட்டமாக ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறுகிறது. புகழ்பெற்ற சிட்னி மைதானத்தில் நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா போன்ற தரமான வீரர்களைக் கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், மேக்ஸ்வெல் போன்ற வலிமையான வீரர்களைக் கொண்டிருப்பதால் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் எனத் தெரிகிறது. இதனால் இந்தத் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.