சிட்னியில் நாளை தொடங்கும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் - தமிழக வீரர் நடராஜன் இடம்பெறவில்லை
Jan 6 2021 7:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிட்னியில் நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெறவில்லை.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இந்நிலையில், சிட்னியில் நாளை தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டியில், கேப்டன் ரஹானே தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக வீரர் நடராஜன் இடம் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அறிவிக்கப்பட்ட 11 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. கடந்த முறை விளையாடிய தொடக்க வீரர் மயங்க் அகர்வால் நீக்கப்பட்ட நிலையில், ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.