இந்தியாவுடனான சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் - மழை நிற்காததால் போட்டி தொடர்ந்து பாதிப்பு

Jan 7 2021 8:48AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய அணி உடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. மழை காரணமாக இந்த போட்டி தடைப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என சமநிலை பெற்றுள்ள நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த அந்த அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் இதில் களமிறங்கினார். ஆனால் அவர் தனது விக்கெட்டை விரைவில் இழந்தார். அணியின் ஸ்கோர் ஒரு விக்கெட்டுக்கு 21 ரன்களாக இருந்தபோது மழை பெய்ததால், உணவு இடைவெளி வரை போட்டி தடைப்பட்டது. அதன் பிறகும் போட்டி தொடங்கப்படாமல் இருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00