சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற 407 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா - இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா கவனமுடன் ரன் சேர்ப்பு

Jan 10 2021 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிட்னியில் நடைபெறும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 407 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

போட்டியின் நான்காம் நாளான இன்று ஆஸ்திரேலியா, 2 விக்கெட்டுக்கு 103 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. சிறப்பாக விளையாடிய லாபுசேன் 73 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். ஸ்மித் 81 ரன்களில் இருந்தபோது அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த மேத்யு வேடும் விரைவில் அவுட் ஆனார். எனினும் ஆல்ரவுண்டர் கிரீன் அபாரமாக விளையாடி 84 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்திருந்தபோது, இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதன்மூலம் 406 ரன்கள் முன்னிலை பெற்ற அந்த அணி, இந்தியா வெற்றி பெற 407 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து எட்டிப்பிடிக்க முடியாத இலக்கை நோக்கி இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. ரோஹித் சர்மாவும், சுப்மான் கில்லும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00