இந்திய வீரர்களின் சிறப்பான பேட்டிங்கால் டிராவில் முடிந்தது சிட்னி டெஸ்ட் கிரிக்‍கெட் - வெற்றிக்‍காக போராடிய ஆஸ்திரேலியா ஏமாற்றம்

Jan 11 2021 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியா - இந்தியா இடையே சிட்னியில் நடைபெற்ற பரபரப்பான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி யாருக்‍கும் வெற்றி, தோல்வி இன்றி டிராவில் முடிந்தது.

இப்போட்டியின் 5-ம் நாளான இன்று இந்திய அணியின் வெற்றிக்கு 309 ரன்கள் தேவைப்பட்டன. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கேப்டன் ரஹானே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். எனினும் அதன் பிறகு ஜோடி சேர்ந்த புஜாராவும், ரிஷப் பந்தும், விக்‍கெட் விழாமல் பார்த்துக்‍ கொண்டதோடு, கணிசமான ரன்களையும் சேர்த்தனர். குறிப்பாக பந்த், அதிரடியாக விளையாடி சிக்‍ஸர்களையும், பவுண்டரிகளையும் அடித்து நொறுக்‍கினார். சதத்தை நோக்‍கி வேகமாக முன்னேறிய அவர், 97 ரன்களில் விக்‍கெட்டைப் பறிகொடுத்தார். அரை சதம் கடந்த புஜாராவுடன் பின்னர் விஹாரி இணைந்தார். தேனீர் இடைவேளைக்‍கு சற்று முன்பாக, புஜாராவும் 77 ரன்களுக்‍கு அவுட் ஆனார். இதனால் இந்திய அணிக்‍கு திடீர் நெருக்‍கடி ஏற்பட்டது. பின்னர் இணைந்த அஸ்வின் மற்றும் விஹாரி ஜோடி ஆட்டத்தை டிரா செய்யும் விதமாக விளையாடினர். ஒரு கட்டத்தில் 100 பந்துகளை எதிர்கொண்ட விஹாரி 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். எஞ்சிய விக்‍கெட்டுகளை வீழ்த்தி, வெற்றி பெற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர்கள் தீவிர முயற்சி செய்தனர். எனினும் நங்கூரம் போல் நிலைத்து நின்ற அஸ்வின் மற்றும் விஹாரி ஆஸ்திரேலிய வீரர்கள் பந்துவீச்சை திறமையாக சமாளித்தனர். அணியின் ஸ்கோர் 5 விக்‍கெட் இழப்புக்‍கு 334 ரன்களாக இருந்தபோது, போட்டியை முடித்துக்‍ கொள்வதாக இரு அணிகளும் ஒப்புக்‍ கொண்டன.

இதனால் இந்தப் போட்டி, டிராவில் முடிந்தது. அஸ்வின் 39 ரன்களுடனும் விஹாரி 23 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 4 போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமநிலை பெற்றுள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி பிரிஸ்பென் நகரில் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00