ஆஸ்திரேலியாவுடனான பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்‍கெட்டில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்‍க வெற்றி - தொடரையும் வென்று சாதனை

Jan 19 2021 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவுக்‍கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்‍கெட்டில் இந்தியா 3 விக்‍கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த சாதனை வெற்றி மூலம் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 369 ரன்களும், இந்தியா 336 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 294 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியாவின் வெற்றிக்‍கு 328 ரன்கள் இலக்‍காக நிர்ணயிக்‍கப்பட்டது. போட்டியின் 4-ம் நாளான நேற்று, இந்தியா தனது 2-வது இன்னிங்ஸில் விக்‍கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று ஆட்டத்தைத் தொடர்ந்தது, சிறிது நேரத்தில் ரோஹித் ஷர்மா அவுட் ஆகி வெளியேறினார். எனினும் மற்றொரு தொடக்‍க வீரர் Shubman Gill சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 91 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்‍கும் வாய்ப்பை இழந்தார். புஜாராவும் தடுப்பு ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அடுத்து வந்த அதிரடி நாயகன் ரிஷப்பந்தும், துடிப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை மிரள வைத்தார்.

இந்தியா வெற்றியை நெருங்கிய வேளையில், வாஷிங்டன் சுந்தரும், ஷர்துல் தக்‍கூரும் அவுட் ஆனதால் லேசான பதற்றம் ஏற்பட்டது. எனினும் நிலையை மிகச் சரியாக கையாண்ட ரிஷப் பந்த், வெற்றிக்‍கான ரன்னை எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் 89 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்‍கு அடித்தளம் அமைத்தார். 3 விக்‍கெட் வித்தியாசத்தில் இந்தியா இந்தியா வெற்றி பெற்று 2-1 என்ற தொடரையும் வென்றது. ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்து 2 தொடர்களைக்‍ கைப்பற்றி புதிய வரலாற்று சாதனையும் படைத்தது இந்திய அணி.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00