இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்‌டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - தமிழக வீரர்கள் அஸ்வின், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு

Jan 20 2021 10:40AM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக வீரர்கள் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், முதலிரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்றன. இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணியில், ரகானே, ரோகித் சர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, சஹா, ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல், ரிஷப் பந்‌த், பும்ரா, இஷாந்த் சர்மா, ஷர்துல் தாகூர், அஷ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் அணியில் ஹர்திக் பாண்ட்யா அணியில் இடம்பிடித்துள்ளார். தமிழக வீரர் நடராஜனுக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை. இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ம் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி 13ம் தேதியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00