ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி - வெற்றி மாலையுடன் தாயகம் திரும்பிய வீரர்களுக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு

Jan 21 2021 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மகத்தான வெற்றிகளை குவித்து வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி இன்று தாயகம் திரும்பியது. மும்பை விமான நிலையத்தில் வீரர்கள் அனைவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள் தொடர், டி-20 தொடர் மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், டி-20 தொடரையும், டெஸ்ட் தொடரையும், இந்திய அணி 2-க்கு ஒன்று என்ற கணக்கில் வென்றது. குறிப்பாக, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, பிரிஸ்பேன் மைதானத்தில் 32 ஆண்டுகளாக டெஸ்டில் தோல்வியையே சந்திக்காத ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா சாதனை புரிந்தது. இந்த சரித்திர சாதனையுடன் இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று தாயகம் திரும்பினர். மும்பை விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு திரண்டிருந்த கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும், ரசிகர்களும் அவர்களுக்கு கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00