விருதுநகர் மாவட்டத்தில் மின்னொளி விளையாட்டு மைதானம் திறப்பு விழா : மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன

Feb 17 2021 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, புதிதாக அமைக்கப்பட்ட மின்னொளி விளையாட்டு மைதான திறப்பு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த தளவாய்புரம் பகுதியில், அரசு உதவி பெறும் பள்ளியில், மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் புதிதாக கைப்பந்து மின்னொளி மைதானம் அமைக்கப்பட்டது. இந்த மின்னொளி மைதானத்தை ராஜபாளையம் வட்டாட்சியர் திரு. ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

திறப்பு விழாவை முன்னிட்டு, மைதானத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடின. முதல் பரிசை, ராஜபாளையம் கைப்பந்து கழகம் அணியும், இரண்டாம் பரிசை, மம்சாபுரம் கைப்பந்து கழகம் அணியும், மூன்றாம் பரிசை, டைனமிக் ஸ்போர்ட்ஸ் அணியும் வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00