ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: சென்னையில் இன்று நடைபெறுகிறது

Feb 18 2021 6:23AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.பி.எல். எனப்படும் இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான ஏலம், சென்னையில் இன்று நடைபெறுகிறது.

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை, வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இப்போட்டிக்கான வீரர்கள் ஏலம், சென்னையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

இந்த ஏலத்தில் பங்கேற்க மொத்தம் ஆயிரத்து 114 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 292 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

"மேட்ச் பிக்சிங்" காரணமாக, போட்டிகளில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடைக் காலம் முடிந்து, போட்டிகளில் விளையாடி வரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் பெயர், ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், ஏலப்பட்டியலில் உள்ளார்.

அதேபோல், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானியின் மகன் சாகித் கிர்மானி, பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் வெல், ஸ்டீவ் சுமித், தென்னாப்ரிக்க வீரர் காலின் இங்கிராம், இங்கிலாந்து வீரர்கள் மார்க்வுட், மொய்ன்அலி, சாம் பில்லிங்ஸ், ஜேசன் ராய், பிளான் கட், பங்களாதேஷ் அணி வீரர் சகீப்-அல்-ஹசன் மற்றும் இந்தியாவை சேர்ந்த கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங் ஆகிய 11 வீரர்களுக்கு, அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றிருந்தாலும், 61 வீரர்கள்தான் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளால் ஏலம் எடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வீரர்களை வாங்குவதற்கு பஞ்சாப் கிங்க்ஸ் அணியிடம் அதிகமாக பட்சமாக 53 கோடியே 20 லட்சம் ரூபாய் இருப்பு உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 19 கோடியே 90 லட்சம் ரூபாய் மீதமுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00