மெல்பெர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - காலிறுதியில் முன்னணி வீரர் ரஃபேல் நடாலுக்கு அதிர்ச்சி தோல்வி
Feb 18 2021 9:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னணி வீரரான ரஃபேல் நடால், காலிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் முதலாவதாக கருதப்படும் ஆஸ்திரேலியா ஓபன் போட்டித்தொடர், அந்நாட்டின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையிர் பிரிவுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில், உலகின் தலைசிறந்த வீரரும், 2-ம் நிலை வீரரான ரஃபேல் நடால், 4-ம் நிலையில் உள்ள கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில்,முதல் 2 செட்களை நடால் கைப்பற்றியதால், அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வீறுகொண்டெழுந்த சிட்சிபாஸ், நடாலுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். 4 மணி 5 நிமிடம் நீடித்த இந்த யுத்தத்தில். 3-6, 2-6, 7-6, 6-4, 7-5 என்ற செட்கணக்கில் நடாலை தோற்கடித்து, சிட்சிபாஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.