இந்திய வீரர்கள் மீதான தாக்குதல் காரணமாக ஐபிஎல் ஸ்பான்சரில் நீக்கப்பட்ட சீன நிறுவனம் - நடப்பு ஐபிஎல் சீசனில் மீண்டும் தேர்வு

Feb 18 2021 9:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
2021-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்‍கெட் தொடருக்கான ஸ்பான்சராக சீனாவின் செல்ஃபோன் நிறுவனம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு எமிரேட்சில் நடந்த 13-வது ஐ.பி.எல்., தொடரின் 'டைட்டில் ஸ்பான்சராக' சீன நாட்டின் அலைபேசி நிறுவனமான விவோ இருந்தது. லடாக்‍ எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீரமரணம் அடைந்தபோது, சீன நிறுவனங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் ஒரு ஆண்டுக்கு மட்டும் சீன 'ஸ்பான்சரை' பி.சி.சி.ஐ 'சஸ்பெண்ட்' செய்தது. புதிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில், ஆன்லைன் பேன்டசி நிறுவனமான 'டிரீம் லெவன்' 222 கோடி ரூபாய் கொடுத்து 'டைட்டில் ஸ்பான்சர்' ஒப்பந்தமானது.

இந்நிலையில் நடப்பு ஆண்டின் 14வது ஐ.பி.எல்., சீசனுக்கான 'டைட்டில் ஸ்பான்சராக' சீன அலைபேசி நிறுவனமான விவோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை ஐபிஎல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், சீனாவின் விவோ நிறுவனத்தை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00