ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் தொடக்‍கம் - ஆஸ்திரேலியவீரர் மேக்‍ஸ்வெல்லை 14 கோடியே 25 லட்சம் ரூபாய்க்‍கு ஏலம் எடுத்தது பெங்களூரு அணி

Feb 18 2021 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். எனப்படும் இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில், அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் மேக்‍ஸ்வெல்லை, 14 கோடியே 25 லட்சம் ரூபாய்க்‍கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை, வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இப்போட்டிக்கான வீரர்கள் ஏலம், சென்னையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் தொடங்கியது. இந்த ஏலத்தில் பங்கேற்கும் 292 வீரர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் மேக்‍ஸ்வெல்லை ஏலம் எடுக்‍க சென்னை, பெங்களூரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், 14 கோடியே 25 லட்சம் ரூபாய்க்‍கு, மேக்ஸ்வெல்லை பெங்களூரு அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஐபில் வரலாற்றில் அதிக தொகைக்‍கு எடுக்‍கப்பட்ட 4-வது வீரர் என்ற பெருமையை மேக்‍ஸ்வெல் பெற்றார். அதற்கு அடுத்தபடியாக அதே நாட்டைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித்தை, 2 கோடியே 20 லட்சம் ரூபாய்க்‍கு டெல்லி அணி தன்வசப்படுத்தியது. இங்கிலாந்தைச் சேர்ந்த மொயின் அலியை, சென்னை அணி 7 கோடி ரூபாய்க்‍கு வாங்கியது. அதேபோல், வங்கதேச வீரர் சகிப் அல் ஹசனை, 3 கோடியே 20 லட்சம் ரூபாய்க்‍கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00