ஐ.பி.எல். வரலாற்றில் அதிகபட்சமாக 16 கோடியே 25 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட கிறிஸ் மோரிஸ்: மொத்தமாக 145 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன வீரர்கள்

Feb 19 2021 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில், அதிகபட்சமாக தென்னாப்பிரிக்‍க ஆல்ரவுண்டர் Chris Morris-ஐ 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்‍கு, ராஜஸ்தான் அணி வாங்கியது.

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர், ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான வீரர்கள் ஏலம், சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் பங்கேற்கும் 292 வீரர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றனர். இதில் 61 வீரர்கள் ஏலத்தில் எடுக்‍கப்பட்டனர். 164 இந்திய வீரர்கள், 125 வெளிநாட்டு வீரர்களுடன், 3 ஐ.சி.சி., உறுப்பு அணிகளின் ஏலத்தில் வீரர்கள் இடம் பெற்றனர்.

தென்னாப்பிரிக்‍க வீரர் Chris Morris-ஐ 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்‍கு, ராஜஸ்தான் அணி வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்‍கு எடுக்‍கப்பட்ட 4வது வீரர் என்ற பெருமையை Chriss Morris பெற்றார். அதற்கு அடுத்தபடியாக நியூஸிலாந்து வீரர் Kyle Jameison-ஐ 15 கோடி ரூபாய்க்‍கு பெங்களூரு அணி வாங்கியது. மேலும், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல்-ஐ 14 கோடியே 25 லட்ச ரூபாய்க்‍கும் அந்த அணி தன்வசப்படுத்தியது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் Jhye Richardson-ஐ 14 கோடி ரூபாய்க்‍கு பஞ்சாப் அணி வாங்கியது. கிருஷ்ணப்பா கவுதம் 9 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி தன்வசப்படுத்தியது. இங்கிலாந்தின் மொயின் அலி 7 கோடி ரூபாய்க்‍கு சென்னை அணியால் வாங்கப்பட்டார். தமிழக வீரர் ஷாரூக்கானை 5 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து பஞ்சாப் அணி பெற்றது. வங்கதேச ஆல் ரவுண்டர் சாஹிப் அல் ஹசன் 3 கோடியே 20 லட்சம் ரூபாய்க்‍கு கொல்கத்தா அணியும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 2​ கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணியும், இங்கிலாந்தின் டேவிட் மலான் 1 கோடியே 50 லட்சம் ரூபாய்க்‍கு பஞ்சாப் அணியும், நியூஸிலாந்து வீரர் ஆடம் மில்னே 3 கோடி 20 லட்சம் ரூபாய்க்‍கு மும்பை அணியும் வாங்கியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00