ஆஸி. ஓபன் மகளிர் சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜப்பானின் ஒசாகா - அமெரிக்க வீராங்கனையை 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தார்
Feb 20 2021 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை ஜப்பானின் Naomi Osaka வென்றுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டி மெல்பர்னில் இன்று நடைபெற்றது. இதில், ஜப்பானின் Naomi Osaka-வும், அமெரிக்காவின் Jennifer Brady-ம் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், Jennifer Brady-ஐ 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து, Naomi Osaka, சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம், Naomi Osaka, 2-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.