சென்னையில் ராணுவ வீரர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் - பங்களாதேஷ் உருவானதன் 50 ஆண்டுகள் நிறைவையொட்டி ஏற்பாடு
Feb 21 2021 1:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை தீவுத்திடலில் இந்திய ராணுவ வீரர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் வெற்றி பெற்று பங்களாதேஷை பிரித்து தனிநாடாக உருவாக்கி 50 ஆண்டுகள் ஆனதை நினைவுகூறும் விதமாக, இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. 2, 5 மற்றும் 10 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில், முதலிடங்களைப் பிடித்த வீரர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.