இந்திய அணிக்‍கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் - 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

Mar 13 2021 10:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய அணிக்‍கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே மோசமாக அமைந்தது. தொடக்க வீரரான கே.எல். ராகுல் 1 ரன்னிலும், கேப்டன் விராட் கோலி 5 ரன் ஏதும் எடுக்காமலும், தவான் 4 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். பின்னர் வந்த ஸ்ரேயாஸ் அய்யர், சிறப்பாக விளையாடிய அரை சதம் அடித்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஆர்ச்சர் 3 விக்கெட்டுளை எடுத்தார்.

இதனையடுத்து 125 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, துவக்க வீரர்களான ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜேசன் ராய் 49 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், அவர்களைத் தொடர்ந்து டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ ஜோடி வெற்றியை உறுதி செய்தது. 16வது ஓவரில் இங்கிலாந்து அணி 130 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேவிட் மாலன் 24 ரன்களுடனும், பேர்ஸ்டோ 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00