அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்‍கு எதிரான 4-வது டி-20 கிரிக்‍கெட் போட்டி - 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி

Mar 19 2021 10:13AM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து மோதிய 4-வது 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அறிமுக வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 57 ரன்களை எடுத்தார்.

இதையடுத்து 186 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்று சமநிலையில் உள்ளன. 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்‍கெட் போட்டி, அகமதாபாத்தில் நாளை இரவு 7 மணிக்‍கு நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00