இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் இந்திய அணி அறிவிப்பு - தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தருக்கு இடம்

Mar 19 2021 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்து அணியுடன் விளையாடும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொட‌ரை இழந்த நிலையில், தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு பிறகு, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணியில், துணைக் கேப்‌டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பந்த், ராகுல், சாஹல், குல்தீப், குர்ணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், சிராஜ், பிரதீஷ் கிருஷ்ணா, ஷர்துல் தாக்குர் மற்றும் தமிழக வீரர்களான வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். சூர்யகுமார் யாதவ், பிரதிஷ் கிருஷ்ணா ஆகியோர் ஒருநாள் அணியில் முதன்முறையாக இடம் பிடித்துள்ளனர். இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, வரும் 23-ம் தேதி மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற உள்ளது. அதேநேரம் மஹாராஷ்டிராவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபமெடுத்து வருவதால், போட்டி அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00