ஜமாய்க்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய இந்தியா - அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்தார் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில்
Mar 19 2021 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜமைக்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய இந்திய அரசுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகள், நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மாலத்தீவு, பூடான், பங்களாதேஷ், நேபாளம், மியான்மர், ஷெசல்ஸ் அஃப்கானிஸ்தான், மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது. அந்த வகையில் ஜமைக்கா நாட்டிற்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜமைக்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய இந்திய அரசுக்கு வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணி வீரர் கிறிஸ் கெயில் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்திய அரசுக்கும், மக்களுக்கும், பிரதமர் திரு. மோடிக்கும் நன்றி எனக் கூறியுள்ளார். இந்தியாவின் நடவடிக்கையை பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.