தேசிய தடகள போட்டியில் சாதனை புரிந்த திருச்சி மாவட்ட வீரர், வீராங்கனைகள் - ரயில் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு

Mar 22 2021 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள் புரிந்து, பதக்கங்களுடன் திரும்பிய திருச்சி வீரர், வீராங்கனைகளுக்கு, ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 24-வது ஃபெடரேஷன் கோப்பைக்கான தேசிய தடகள சாம்பியன் பட்ட போட்டிகள் கடந்த 15ம் தேதி தொடங்கி 19ம்தேதி வரை நடைபெற்றன. இதில் தமிழகம் சார்பாக திருச்சியில் இருந்து மட்டும் 20 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில், திருச்சியை சேர்ந்த தனலட்சுமி என்ற இளம்பெண், 100 மீட்டர் ஓட்டத்தில் 11 புள்ளி 39 வினாடிகளில் கடந்து தங்க பதக்கம் வென்றார். குறிப்பாக ஹீமா தாஸ், டூட்டி சந்த் என இரு புகழ்பெற்ற இந்திய வீராங்கனைகளையும் பின்னுக்குத் தள்ளி, திருச்சி வீராங்கனை தனலட்சுமி சாதனை படைத்துள்ளார். இதேபோல், நேற்று முன்தினம் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதிச் சுற்றில் பிரபல வீராங்கனை பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்து வெள்ளிப்பதக்கமும் வென்றார்.

இதேபோல் ஆண்கள் பிரிவிலும், தஞ்சை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் வெற்றிகளை குவித்தனர். தேசிய தடகளப்போட்டிகளில் பதங்கங்களை குவித்து திருச்சி வந்த வீரர், வீராங்கணைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட தடகள சங்கத்தினர், மக்கள் சக்தி இயக்கத்தினர், பொன்மலை ரயில்வே மைதான வீரர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் சால்வை, அணிவித்தும் மலர்மாலை அணிவித்தும் வீரர், வீராங்கனைகளை வரவேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00