கிராமத்து குளத்தில் பயிற்சி பெற்று சர்வதேச நீச்சலில் தங்கம் வென்று சாதித்த மயிலாடுதுறை இளைஞர் - நேபாளத்திலிருந்து வெற்றி மகுடத்துடன் ஊர் திரும்பியபோது கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

Mar 24 2021 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், கிராம பொதுக்குளத்தில் நீச்சல் பயிற்சி மேற்கொண்டு, நேபாளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான நீச்சல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். வெற்றி மகுடத்துடன் சொந்த ஊர் திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த எரவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் திரு.ஆல்ரின் ஆம்ஸ்ட்ராங். ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த இவர், நேபாளில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச அளவிலான பின்னோக்கி செல்லும் நீச்சல் போட்டியில், தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார். 100 மீட்டர் நீச்சல் போட்டியில் பங்கேற்ற இவர், ஒரு நிமிடம் 9 புள்ளி மூன்று ஆறு விநாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார். நேபாளில் இருந்து சொந்த ஊர் திரும்பிய அவருக்கு, மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் கிராமமக்கள் மற்றும் நாம் மக்கள் இயக்கத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆல்ரின் ஆம்ஸ்ட்ராங், ஊர் பொதுக்குளத்தை சுத்தம் செய்து நீச்சல் பயிற்சி மேற்கொண்டதாகவும், பயிற்சியாளர் இல்லாமல் தனியாகவே பயிற்சி மேற்கொண்டு சர்வதேச அளவிலான போட்டியில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00