இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்‍கெட் போட்டி - 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

Mar 27 2021 9:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்‍கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒருநாள் கிரிக்‍கெட் போட்டி புனேயில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற , இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணி, அதிரடியாக விளையாடிய 50 ஓவர்களில் 6 விக்‍கெட்டுகளை இழந்து 336 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 108 ரன்களும், ரிஷப் பண்ட் 77 ரன்களும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்‍கத்தில் இருந்தே ரன் குவிப்பில் ஈடுபட்ட அந்த அணி, ஜானி பேர்ஸ்டோ மற்றும் பென் ஸ்டோக்சின் பேட்டிங் சூறாவளியில் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் சிக்‍கி திணறடிக்‍கப்பட்டனர். 43.3 ஓவரில் 4 விக்‍கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்‍கான 337 ரன்களை இங்கிலாந்து எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இதனிடையே, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர். 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்‍கெட் போட்டி, புனேவில் நாளை பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00