காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான சைக்கிள் பயணம் : 3,600 கிலோமீட்டர் தூரத்தை 8 நாட்களில் கடந்து இளைஞர் சாதனை

Sep 8 2021 10:16AM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான 3 ஆயிரத்து 600 கிலோமீட்டர் தூரத்தை, இளைஞர் ஒருவர் அதிவேகமாக சைக்‍கிளில் கடந்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் Narbal நகரைச் சேர்ந்த Adil Teli என்ற 23 வயது இளைஞர், கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி காலை 7.30 மணிக்‍கு, ஸ்ரீநகரின் Ghanta Ghar பகுதியில், தனது சைக்‍கிள் பயணத்தைத் தொடங்கினார். 3 ஆயிரத்து 600 கிலோமீட்டர் இலக்‍கைக்‍ கொண்டு, மிகுந்த விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்‍கையுடனும் பயணம் மேற்கொண்ட அவர், கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி காலை 9 மணியளவில், கன்னியாகுமரி வந்தடைந்தார். 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்தை, 8 நாட்கள் ஒரு மணி நேரம் 37 நிமிடங்களில் கடந்ததற்காக, கின்னஸ் அமைப்பு, Adil Teli-யை சாதனையாளராக அங்கீகரித்துள்ளது. இதன்மூலம், உலகிலேயே அதிவேக சைக்‍கிள் பயணத்திற்கான கின்னஸ் உலக சாதனை விருதை அவருக்‍கு வழங்கி கௌரவித்துள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த Adil Teli, உலக சாதனை படைப்பதற்காக, பஞ்சாபில் கடந்த 6 மாதங்களாக கடுமையான சைக்‍கிள் பயிற்சி மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00