மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

Sep 20 2021 7:33AM
எழுத்தின் அளவு: அ + அ -
மும்பை இந்தியன்ஸ் அணிக்‍கு எதிரான ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டியில், சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த நிலையில், சில வீரர்களுக்‍கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், 29 லீக் ஆட்டங்களுடன் போட்டி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், மீதமுள்ள 31 ஆட்டங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களுக்கு மாற்றப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 6 விக்கெட் இழப்புக்‍கு 156 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 58 பந்தில் 88 ரன்கள் விளாசினார்.

157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, சென்னை அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்‍க முடியாமல் திணறியது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 58 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்தது. கேப்டன் பொல்லார்ட் 15 ரன்னில் வெளியேற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி உறுதியானது. ஆட்டநேர முடிவில் அந்த 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்து, 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றி மூலம் 8 போட்டிகளில் விளையாடி, 6-ல் வெற்றி பெற்ற சென்னை அணி, புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இன்று நடைபெறவுள்ள லீக்‍ ஆட்டத்தில், கொல்கத்தா அணியை, பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00