சர்வதேச கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நாகை மாணவி - பயணச்செலவுக்கு பணம் இல்லாததால் பங்கேற்க இயலாத சூழல்

Sep 21 2021 5:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
நேபாளத்தில் நடைபெறும் சர்வதேச கைப்பந்து போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவிக்கு, போதிய நிதியுதவி கிடைக்காததால், போட்டியில் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி என்பவர், வைத்தீஸ்வரன் கோயில் கீழ வீதியில் அர்ச்சனை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கணவர் செல்வராஜ், 17 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தனி ஆளாக 2 மகள்களை வளர்த்து வருகிறார். இவரது இளைய மகள் விக்னேஸ்வரி உடற்கல்வி ஆசிரியருக்கான இளங்கலைப் படிப்பு படித்து வருகிறார். இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரில் நடந்த தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில், தமிழக அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். வரும் 26-ம் தேதி நேபாளத்தில் சர்வதேச அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்க விக்னேஷ்வரி தேர்வாகியுள்ளார். அரசு அங்கீகரித்து தனியார் அமைப்பு மூலம் நடத்தப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்க நேபாளம் செல்ல வேண்டுமென்றால், 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்பதால், விக்னேஸ்வரி போட்டியில் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. தன்னைப் போலவே மேலும் 3 மாணவிகள் பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும், தங்களுக்கான பயணச் செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றும், மாணவி விக்னேஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00