ஐபிஎல் கிரிக்கெட்டில் மீண்டும் இன்று கேப்டனாக களமிறங்குகிறார் தோனி - ஹைதராபாத் அணியுடன் சென்னை அணி இன்று மோதல்
May 1 2022 10:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பொறுப்பு மீண்டும் தோனிவசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஹைதராபாத் அணியுடன் சென்னை மோதுகிறது.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனின் முதல் 8 போட்டிகளில் சென்னை அணியை ஜடேஜாவே வழி நடத்தினார். ஆனால் 8 போட்டிகளில் சென்னை அணி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற முடிந்தது. இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும், வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளதால், ஜடேஜாவுக்கு மேலும் அழுத்தங்கள் அதிகரித்தன. இந்நிலையில் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகியதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து கேப்டன் பொறுப்பு மீண்டும் தோனி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. தோனி மீண்டும் கேப்டனாக செயல்பட உள்ளதால், இப்போட்டியை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.