ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி : 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி

May 2 2022 9:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐதராபாத் அணிக்‍கு எதிரான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 46வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது. அணியின் ஸ்கோர் 182 என இருந்தபோது, ருதுராஜ் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். கான்வே ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் விளாசினார். ஆட்டநேர முடிவில், சென்னை அணி, 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 202 ரன்கள் குவித்தது. இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா 39 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 47 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய பூரன், 64 ரன்களை குவித்தார். 20 ஓவர் முடிவில் அந்த அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை மட்டுமே எடுத்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சென்னை அணியின் முகேஷ் சௌத்ரி அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார். மும்பை Wankhede மைதானத்தில் இன்று நடைபெறும் 47-வது லீக்‍ போட்டியில், கொல்கத்தா அணியை, ராஜஸ்தான் அணி எதிர்கொள்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00