ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணியில் அரியலூர் மாணவருக்கு இடம் - கிராம மக்கள் உற்சாக கொண்டாட்டம்

May 10 2022 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணியில் அரியலூரை சேர்ந்த கார்த்திக் என்ற வீரர் இடம் பெற்றதால் அவரது சொந்த ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரியலூர் ராமலிங்க நகரில் வசிப்பவர் செல்வம். காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களின் மூத்த மகன் கார்த்திக். இவர் சிறுவயது முதலே ஹாக்கி விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டு தீவிர பயிற்சி பெற்றுள்ளார். இவரது லட்சியத்திற்கு இவரது பெற்றோர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர். பல்வேறு பள்ளிகளில் பயின்ற கார்த்திக், கோவில்பட்டியில் உள்ள அரசு விளையாட்டு விடுதியில் தங்கி பயின்று ஹாக்கி பயிற்சி பெற்று வந்துள்ளார். இவர் தமிழக அணிக்காக இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் விளையாடி கோப்பைகளை பெற்று அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தனது ஆபார திறமையால் தற்போது இந்திய அணியில் இடம் பெற்று சாதித்துள்ளார். ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணி தேர்வில் கார்த்திக் முன்கள வீரராக தேர்வு செய்யப்பட்டு அணியில் இடம் பிடித்துள்ளார். அரியலூர் மாவட்ட மக்களிடையே இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணிக்காக தங்களது மகன் விளையாடுவது மிகவும் பெருமையாகவும் உள்ளதாக கார்த்திக்‍கின் பெற்றோர் மகிழ்ச்சி பொங்க கூறுகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00