ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் - 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

May 12 2022 11:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிப்பெற்றது.

ஐபிஎல் தொடரின் 58வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், யாஸஷ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அஸ்வின் அரைசதம் அடித்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய ஜெய்ஸ்வால் 19 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களளை குவித்தது. தொடர்ந்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடியது. இதில் சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரிஷாப் பண்ட் 2 சிக்ஸர்களை அடித்து அசத்தினார். இதனால் டெல்லி அணி 18 புள்ளி 1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00